Editorial / 2018 மார்ச் 11 , பி.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், பார்சிலோனா, றியல் மட்ரிட் ஆகிய அணிகள் வென்றன.
மலாகா அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றிருந்தது. பார்சிலோனா சார்பாக, லூயிஸ் சுவாரஸ், பிலிப் கோச்சினியோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
தனது மூன்றாவது மகன் பிறந்தமை காரணமாக லியனல் மெஸ்ஸி இப்போட்டியில் கலந்துகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐபார் அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது. றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றதோடு, ஐபார் சார்பாகப் பெறப்பட்ட கோலை இவான் றமிஸ் பெற்றார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026