2025 ஜூலை 31, வியாழக்கிழமை

பார்சிலோனாவில் றஷ்ஃபோர்ட் இணைய கொள்கையளவில் இணக்கம்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 21 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் இணைவதை நெருங்கியுள்ளார்.

கடனடிப்படையில் 27 வயதான றஷ்ஃபோர்ட்டைக் கைச்சாத்திட கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

கடந்த பருவகாலத்தின் இரண்டாவது அரைப்பகுதியை இன்னொரு பிறீமியர் லீக் கழகமான அஸ்தன் வில்லாவில் கடனடிப்படையில் றஷ்ஃபோர்ட் கழித்திருந்தார்.

தனியாகப் பயிற்சி பெறுமாறு கூறப்பட்ட ஐந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வீரர்களில் றஷ்ஃபோர்ட் ஒருவராவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .