2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பி.எஸ்.எல்: இறுதிப் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 22 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு – 20 போட்டித் தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் (பி.எஸ்.எல்) இறுதிப் போட்டிக்கு முல்தான் சுல்தான்ஸ் தகுதி பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபு தாபியில் நேற்றிரவு நடைபெற்ற இஸ்லாமபாத் யுனைட்டெட்டுடனான தகுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு சுல்தான்ஸ் தகுதி பெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: முல்தான்

முல்தான்: 180/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷொஹைப் மக்ஸ்கூட் 59 (41), குஷ்டில் ஷா ஆ.இ 42 (22), ஜோன்ஸன் சார்ள்ஸ் 41 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷடாப் கான் 2/25 [4], ஹஸன் அலி 0/25 [4])

இஸ்லாமபாத்: 149/10 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா 70 (40) ஓட்டங்கள். பந்துவீச்சு: சொஹைல் தன்வீர் 3/17 [4], பிளஸிங்க் முஸர்பனி 3/31 [4], இம்ரான் தாஹீர் 2/29 [4])

போட்டியின் நாயகன்: சொஹைல் தன்வீர்

இதேவேளை, பெஷாவர் ஸல்மியுடனான முதலாவது வெளியேற்றப் போட்டியில் தோற்ற நடப்புச் சம்பியன்களான கராச்சி கிங்ஸ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பெஷாவர்

கராச்சி: 175/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 53 (45), திஸர பெரேரா 37 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் இர்ஃபான் 2/21 [4], வஹாப் றியாஸ் 2/29 [4])

பெஷாவர்: 176/5 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹஸரத்துல்லா ஸஸாய் 77 (38), ஷொய்ப் மலிக் 30 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: திஸர பெரேரா 2/10 [2])

போட்டியின் நாயகன்: ஹஸரத்துல்லா ஸஸாய்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .