2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

பி.எஸ்.எல்லில்: பக்கருக்கு தடையா?

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 30 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் (பி.எஸ்.எல்), ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற கராச்சி கிங்ஸுக்கெதிரான போட்டியில் லாகூர் குவாலன்டர்ஸின் துடுப்பாட்டவீரர் பக்கர் ஸமன் பந்தின் தன்மையை மாற்றியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் குறைந்தது ஒரு போட்டித் தடையைவாவது எதிர்நோக்கவுள்ளார்.

மூன்றாம் கட்டமாக பக்கர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், இதில் குறைந்த பட்சம் ஒரு போட்டித் தடையையும், அதிகபட்சமாக இரண்டு போட்டிகள் தடையும் பி.எஸ்.எல் பருவகாலத்தின் முதலாவது மீறலுக்கு கிடைக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி மத்தியஸ்தர் ரொஷான் மஹாநாம விசாரணையொன்றை நடத்தவுள்ள நிலையில் பக்கர் குற்றஞ்சாட்டை எதிர்நோக்கவுள்ளார்.

கிங்ஸ் துடுப்பெடுத்தாடும்போது இறுதி ஓவரின் ஆரம்பத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றிருந்தது. குவாலன்டர்ஸின் அணித்தலைவர் ஷகீன் ஷா அஃப்ரிடி, பக்கருக்கிடையில் பந்து பரிமாற்றப்பட்டதைத் தொடர்ந்து அவ்வணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் றாஃப்பிடமிருந்து நடுவர் பைஸல் அஃப்ரிடி சோதனைக்காக வாங்கியிருந்தார். சக நடுவர் ஷரஃபுட்டுலாவிடம் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் பந்து சேதமடைந்ததாகக் கருதி பந்தைப் பிரதியிட்டிருந்தனர். கிங்ஸுக்கு ஐந்து தண்ட ஓட்டங்கள் கிடைத்திருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .