Shanmugan Murugavel / 2026 மார்ச் 24 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

இறுதி நிமிடத்தில் இந்தியன் பிறீமியர் லீக்குக்காக (ஐ.பி.எல்) பாகிஸ்தான் சுப்பர் லீக்கை (பி.எஸ்.எல்) விட்டு வெளியேறும் வீரர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஷின் நக்வி உறுதியளித்துள்ளார்.
ஐ.பி.எல்லில் கொல்கத்தா நைட் றைடர்ஸால் ஒப்பந்தம் செய்யப்பட்டதையடுத்து சிம்பாப்வேயின் பிளெஸிங்க் முஸர்பனி பி.எஸ்.எல்லிலிருந்து விலகிய நிலையில், லாகூர் குவாலன்டர்ஸிலிருந்து விலகி ராஜஸ்தான் றோயல்ஸில் காயமடந்த சாம் கர்ரனை இலங்கையின் தசுன் ஷானக பிரதியிடவுள்ளார்.
கடந்தாண்டும் இவ்வாறு பெஷாவர் ஸல்மிக்காக விளையாடவிருந்த தென்னாபிரிக்காவின் கொர்பின் பொஷ் இறுதி நேரத்தில் மாறி மும்பை இந்தியன்ஸுக்காக விளையாடிய நிலையில் ஓராண்டுத் தடையை எதிர்கொண்டிருந்தார்.
12 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago