Editorial / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பிக் பாஷில் இனி நாணயச் சுழற்சி பயன்படுத்த்தப்படபோவதில்லை. இதற்கு பதிலாக துடுப்புமட்டையானது சுழற்றப்படவுள்ளது.
அந்தவகையில், எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகவிருக்கும் பிக் பாஷின் எட்டாவது பருவகாலத்தில் நாணயச் சுழற்சியின் பூ, தலையைத் தேர்வு செய்வதற்கு பதிலாக எதிரணியின் மைதானங்களுக்கு விஜயம் செய்யும் அணித்தலைவர்கள் துடுப்புமட்டையின் தட்டையானது அல்லது மேடான பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த துடுப்புமட்டை சுழற்சியின்போது ஒரு முழுத் தடவையாவது துடுப்புமட்டை சுழல வேண்டுமென்பதுடன், தட்டையான, மேடான பக்கங்கள் சம அளவின் விழும் பொருட்டு இதற்கென விசேடமான துடுப்புமட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
36 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
49 minute ago