Shanmugan Murugavel / 2024 ஜூன் 10 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் தற்போதைய இரண்டாம் நிலை வீரரான கார்லோஸ் அல்கரேஸ் சம்பியனானார்.
ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற தனது இறுதிப் போட்டியில் நான்காம் நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை எதிர்கொண்ட ஸ்பெய்னின் அல்கரேஸ், 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனானார்.
தனது அரையிறுதிப் போட்டியில் தற்போதைய முதல்நிலை வீரரான ஜனிக் சின்னரை 2-6, 6-3, 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு அல்கரேஸ் தகுதி பெற்றதோடு, தனது அரையிறுதிப் போட்டியில் ஏழாம் நிலை வீரரான கஸ்பர் ருட்டை எதிர்கொண்ட ஜேர்மனியின் ஸவ்ரேவ், 2-6, 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார்.
8 minute ago
14 minute ago
25 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
25 minute ago
26 minute ago