2025 மே 17, சனிக்கிழமை

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடர்: சம்பியனான ஜோகோவிச்

Shanmugan Murugavel   / 2023 ஜூன் 12 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் தற்போதைய முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் சம்பியனாகியுள்ளார்.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் நான்காம் நிலை வீரரான கஸ்பர் றூட்டை 7-6 (7-1), 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வென்றே தனது 23ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை சேர்பியாவின் ஜோக்கோவிச் வென்றிருந்தார்.

அந்தவகையில் அதிக கிரான்ட் ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றிய ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸின் சாதனையை 36 வயதான ஜோக்கோவிச் சமப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, பெண்களில் செக் குடியரசின் கரோலினா முஞ்சோவாவை 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்றே உலகின் முதல்நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் சம்பியனாகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .