Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூலை 11 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோப்பா அமெரிக்கா தொடரில் ஆர்ஜென்டீனா சம்பியனானது.
பிரேஸிலில் நடைபெற்று வந்த இத்தொடரில், இன்று காலை நடைபெற்ற பிரேஸிலுடனான இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே ஆர்ஜென்டீனா சம்பியனாகியிருந்தது.
ஆர்ஜென்டீனாவின் மத்தியகளவீரர் றொட்றிகோ டீ போல் முன்னோக்கி அனுப்பிய பந்தை பிரேஸிலின் பின்களவீரர் றெனான் லொன்டி இடைமறிக்கத் தவறிய நிலையில், அதைப் பெற்றுக் கொண்ட ஆர்ஜென்டீனாவின் இன்னொரு மத்தியகளவீரரான ஏஞ்சல் டி மரியா, பிரேஸிலின் கோல் காப்பாளர் எடெர்சனைத் தாண்டியே குறித்த கோலைப் பெற்றிருந்தார்.
அந்தவகையில், இவ்வெற்றி மூலம் தனது 15 ஆண்டுகால விளையாடும் காலத்தில், ஆர்ஜென்டீனாவுடன் முதலாவது தொடரில் 34 வயதான லியனல் மெஸ்ஸி சம்பியனாகியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .