Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 26 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், அத்லெட்டிக் பில்பாவோவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், 1-2 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றது.
மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஸ்டெஃபான் சவிச் பெற்றிருந்த நிலையில், பில்பாவோ சார்பாக அலெக்ஸ் பெரென்குயர், இனிகோ மார்டின்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இப்போட்டியின் முடிவில், லா லிகா புள்ளிகள் பட்டியலில் 73 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட் காணப்படுகின்றது. 71 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களும், அதே 71 புள்ளிகளுடன் ஒரு போட்டி குறைவாக விளையாடியபடி மூன்றாமிடத்தில் பார்சிலோனாவும், 70 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செவிய்யாவுடன் காணப்படுகின்றன.
36 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
49 minute ago