Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் டோக்கியோவில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற உலகத் தடகள சம்பியன்ஷிப்பில் ஐக்கிய அமெரிக்காவின் மெலிஸ்ஸா ஜெஃபெர்சன் வூடன் வென்று புதிய 100 மீற்றர் உலக சம்பியனாகியுள்ளார்.
போட்டித் தூரத்தை 10.61 செக்கன்களில் கடந்தே ஜெஃபெர்சன்-வூடன் முதலிடம் பெற்ற நிலையில், 10.76 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து ஜமைக்காவின் தியா கிளெய்டன் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பின்தொடைதசைநார் உபாதைக்குள்ளான நடப்பு ஒலிம்பிக் சம்பியனான ஜூலியன் அல்ஃபேட் 10.84 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து மூன்றாமிடத்தைப் பெற்றார்.
கடந்த சம்பியனான ஷ காரி றிச்சர்ட்சன் 10.94 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து ஐந்தாமிடத்தைப் பெற்றதோடு, தனது இறுதி சம்பியன்ஷிப்பில் பங்கேற்ற 38 வயதான ஜமைக்காவின் ஷெலி-அன் பிறேஸர் பிறைஸ் போட்டித் தூரத்தை 11.03 செக்கன்களில் கடந்து ஆறாமிடத்தைப் பெற்றிருந்தார்.
12 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
41 minute ago
1 hours ago