2025 ஜூலை 03, வியாழக்கிழமை

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இன்டர் மிலன்

Editorial   / 2020 பெப்ரவரி 11 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு இன்டர் மிலன் முன்னேறியுள்ளது.

இன்டர் மிலன், ஏ.சி மிலனின் சொந்த மைதானமான சான் சிரோவில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிகளுக்கிடையிலான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்றே சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்துக்கு இன்டர் மிலன் முன்னேறியுள்ளது.

இன்டர் மிலன் சார்பாக, மார்செலோ பிறோஸ்னோவிச், மத்தியாஸ் வெசினோ, ஸ்டெஃபான் டி விர்ஜி, றொமெலு லுக்காக்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஏ.சி மிலன் சார்பாக, அன்டெ றெபிச், ஸல்டான் இப்ராஹிமோவிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், பர்மாவின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், பிலிப் கைசெடோ பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் லேஸியோ வென்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற லெக்கேயுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் நாப்போலி தோல்வியடைந்திருந்தது. லெக்கே சார்பாக, ஜலூகா லபதூகா இரண்டு கோல்களையும், மார்கோ மன்கொஸு ஒரு கோலையும் பெற்றனர். நாப்போலி சார்பாக, அர்க்கடியுஸ் மிலிச், ஜொஸெ கல்லகோன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் இன்டர் மிலன், நடப்புச் சம்பியன்கள் ஜுவென்டஸ் ஆகியன தலா 54 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் முதலாமிடத்தில் இன்டர் மிலனும், இரண்டாமிடத்தில் ஜுவென்டஸும் காணப்படுகின்றனர். 53 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லேஸியோவும், 42 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லாண்டாவும், 39 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் றோமாவும் காணப்படுகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .