Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 மே 22 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.பி.எல் சீசனின் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி உள்ளது குஜராத் டைட்டன்ஸ். 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. பெங்களூரு தோல்வி அடைந்த காரணத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குள் நான்காவது அணியாக நுழைந்துள்ளது.
இந்தப் போட்டியில் 198 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் அணி விரட்டியது. சாஹா மற்றும் சுப்மன் கில் இன்னிங்ஸை தொடங்கினர். சாஹா, 12 ஓட்டங்களிள் வெளியேறினார். தொடர்ந்து வந்த விஜய் சங்கர், கில் உடன் 123 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
இன்னிங்ஸை நிதானமாக தொடங்கிய விஜய் சங்கர், அப்படியே வேகம் கூட்டினார். 35 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்து அவர் விக்கெட்டை இழந்தார். 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். ஷனகா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்த சுப்மன் கில், 52 பந்துகளில் 104 ஓட்டங்கள் எடுத்தார். 5 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் அவரது ஆட்டத்தில் அடங்கும். 19.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது குஜராத்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
5 hours ago