2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெங்களூரை வென்றது ராஜஸ்தான்: குஜராத்துடன் நாளை மோதல்

Editorial   / 2022 மே 28 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை இடம்பெறவுள்ள ஐபிஎல் 2022இன் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி எதிர்கொள்கிறது.

நேற்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு ரோயல் சலெஞ்ஜர்ஸ் அணியை 7 விக்கெட்டுகளால் வென்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் அணி முன்னேறியுள்ளது.

அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்ற  போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் களத்தடுப்பை தெரிவு செய்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ரஜத் படிதார் 58(42), டு பிளெசிஸ் 25(27) ஓட்டங்களைப் பெற்றதுடன், ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, ஒபேட் மெக்கோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

158 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான், 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஜோஸ் பட்லர் 106(60), சஞ்சு சம்சன் 23(21) ஓட்டங்களைப் பெற்றனர். பெங்களூரு சார்பில் ஜோஷ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஜோஸ் பட்லர் தெரிவு செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .