Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 25 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளைக் கொண்ட ஏழாவது சர்வதேச சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் லான்டோவரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலுடனான போட்டியில் பெனால்டியில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றது.
இப்போட்டியின் ஆரம்பத்திலேயே ஆர்சனலின் பின்களவீரர் சீட் கொலாசினக்கை வீழ்த்தியதற்காக மஞ்சள் அட்டை காட்டப்பெற்றிருந்ததுடன், ஒன்பதாவது நிமிடத்தில் ஆர்சனலின் முனகளவீரர் அலெக்ஸான்ட்ரே லகஸ்ரேயின் உதையை கையால் வேண்டுமென்றே தடுத்ததன் காரணமாக இரண்டாவது மஞ்சள் அட்டையைப் பெற்று, சிவப்பு அட்டை காட்டப்பெற்று மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்தவகையில், இச்சம்பவத்தின்போது வழங்கப்பட்ட பெனால்டியை லகஸ்ரே கோலாக்க ஆரம்பத்திலேயே ஆர்சனல் முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து போட்டியின் 24ஆவது நிமிடத்தில் லகஸ்ரே வழங்கிய பந்தை, ஆர்சனலின் இன்னொரு முன்களவீரரான பியரி எம்ரிக் அபுமெயாங்க் கோலாக்க தமது முன்னிலையை ஆர்சனல் இரட்டிப்பாக்கிக் கொண்டது.
எவ்வாறெனினும், றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரரான டொனி க்றூஸை இழுத்தமைக்காக ஏற்கெனவே மஞ்சள் அட்டை காட்டப்பெற்றிருந்த ஆர்சனலின் பின்களவீரரான சோக்ரடீஸ் பஸ்தபோலஸ், 40ஆவது நிமிடத்தில் றியல் மட்ரிட்டின் இன்னொரு மத்தியகளவீரரான லூகா மோட்ரிச்சை விதிமுறைகளை மீறி கையாண்டதற்காக மேலுமொரு மஞ்சள் அட்டை காட்டப்பெற்று, சிவப்பு அட்டை பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
அந்தவகையில், முதற்பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் முன்னிலை வகித்தபோதும், 56ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராகக் களமிறங்கிய றியல் மட்ரிட்டின் முன்களவீரர் கரெத் பேல் பெற்ற கோலின் மூலம் ஆர்சனலின் முன்னிலையை ஒரு கோலாகக் குறைத்த றியல் மட்ரிட், அடுத்த மூன்றாவது நிமிடத்தில் தமது பின்களவீரர் மார்ஷெல்லோ வழங்கிய பந்தை தமது முன்களவீரரான மார்கோ அஸென்ஸியோ கோலாக்கியதோடு கோலெண்ணிக்கையைச் சமப்படுத்த, போட்டியின் வழமையான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இந்நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்கான பெனால்டியில், றியல் மட்ரிட் சார்பாக பேல் தவறவிட்டபோதும், மத்தியகளவீரரான இஸ்கோ, பின்களவீரரான ரபேல் வரான், முன்களவீரரான வின்சியஸ் ஜூனியர் ஆகியோர் பெனால்டிகளை உட்செலுத்த, ஆர்சனல் சார்பாக முன்களவீரர்களான றெய்ஸ் நெல்சன், புகாயோ சாகா ஆகியோர் பெனால்டிகளை உட்செலுத்தியபோதும், மத்தியகளவீரர்களான கிரனிட் ஸாகா, றொபி பேர்ட்டன், பின்களவீரர் நாச்சோ மொன்றியல் ஆகியோர் பெனால்டிகளைத் தவறவிட்ட நிலையில் 3-2 என்ற ரீதியில் றியல் மட்ரிட் வென்றது.
இதேவேளை, ஐக்கிய அமெரிக்காவின் கன்ஸாஸ் நகரத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில், தமது மத்தியகளவீரர் லியோன் கொரெட்ஸ்கா பெற்ற கோலால் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனை ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் வென்றது.
இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் அரிங்டனில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மெக்ஸிக்க கழகமான குவாடலஜராவுடனான தமது போட்டியானது வழமையான நேரத்தில் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில், 5-4 என்ற ரீதியில் பெனால்டியில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் வென்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago