Editorial / 2026 மார்ச் 22 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் மூன்றிற்குட்பட்ட சாமிமலை பெயலோன் தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி, கடந்த 20 ஆம் திகதி பாடசாலை அதிபர் எஸ். பிரபாகரன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஹட்டன் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. மகேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். அவருடன் பாடசாலை ஆசிரியர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், பழைய மாணவர் சங்கத்தின் விளையாட்டுக்குழுப் பொறுப்பாளர் திரு. பெ. தணேஸ்குமார், உப செயலாளர் துளசிதாசன் உள்ளிட்ட பழைய மாணவர்களும், பெருமளவிலான பெற்றோர்களும் பொதுமக்களும் இவ்விளையாட்டு விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இவ்விழா, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.







9 minute ago
12 minute ago
28 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
28 minute ago
36 minute ago