2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

போட்டியில் எல்லை மீறிய அழையா விருந்தாளி

Editorial   / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கும்  தென் ஆப்பிரிக்காவுக்கும்  இடையேயான 2 ஆவது டி20 போட்டி  அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ரோகித் சர்மா , கேஎல் ராகுல் சிறப்பான தொடக்கம் அளித்த நிலையில் 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்களை எடுத்துள்ளது.

இந்நிலையில், போட்டியின் 7-வது ஓவரில் மைதானத்திற்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது.

பாம்பு மைதானத்திற்குள் நுழைந்ததை கவனித்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் சற்று அதிர்ச்சியடைந்து உடனடியாக இது குறித்து நடுவரிடம் தெரிவித்தனர். பாம்பு செல்லும் பகுதியில் இருந்து விலகிய வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.

பின்னர், பாம்பு பிடிப்பவர்கள் விரைந்து வந்து மைதானத்திற்குள் சுற்றிய பாம்பை பிடித்து சென்றனர். மைதானத்திற்குள் பாம்பு நுழைந்ததால் தடைபட்ட ஆட்டம் சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

போட்டி நடைபெற்று வரும் மைதானத்திற்குள் பாம்பு நுழைந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .