Shanmugan Murugavel / 2022 டிசெம்பர் 05 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், நேற்று இரவு நடைபெற்ற போலந்து உடனான இறுதி 16 அணிகளுக்கு இடையிலான சுற்றுப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற நடப்புச் சம்பியன்களான பிரான்ஸ், காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
பிரான்ஸ் சார்பாக, கிலியான் மப்பே இரண்டு கோல்களையும், ஒலிவியர் ஜிரூட் ஒரு கோலையும் பெற்றதோடு, போலந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை றொபேர்ட் லெவன்டோஸ்கி பெற்றிருந்தார்.
இதேவேளை, இன்று அதிகாலை நடைபெற்ற செனகலுடனான இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற இங்கிலாந்தும் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இங்கிலாந்து சார்பாக, ஜோர்டான் ஹென்டர்சன், அணித்தலைவர் ஹரி கேன், புகாயோ ஸாகா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026