Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவைச் சேர்ந்த நெடுந்தூர ஓட்ட வீரரான "மோ" மொஹமட் ஃபாரா, ஆண்கள் நெடுந்தூர ஓட்டங்கள் இரண்டிலும் தங்கம் வென்றதோடு, கடந்த 40 ஆண்டுகளில், அவ்வாறான இரண்டு தங்கங்களையும் தக்க வைத்துக் கொண்ட முதலாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.
சனிக்கிழமை இடம்பெற்ற 5,000 மீற்றர் ஓட்டத்தில் 13:03:30 என்ற நேரப்பெறுதியில் தனது தூரத்தை நிறைவுசெய்த ஃபாரா, இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் தனது இரண்டாவது தங்கத்தைப் பெற்றுக் கொண்டார். இரண்டாவது இடத்தை, அமெரிக்காபோல் கிப்கெமொய் செலிமோ (13:03:90) பெற்றுக்கொள்ள, எதியோப்பியாவின் ஹகோஸ் கெப்ரெஹிவெட் (13:04:35), மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
ஏற்கெனவே இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் 10,000 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்த ஃபாரா, நெடுந்தூர இரட்டை-இரட்டை எனப்படும் பெருமையைப் பெற்றுக் கொண்டார். கடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர், இந்தப் பெருமையைப் பெற்றுக் கொண்டிருந்தார்.
இந்தச் சாதனையைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஃபாரா, "கடவுளே, என்னால் நம்ப முடியவில்லை. 10,000 மீற்றர் ஓட்டத்தைத் தொடர்ந்து, எனது கால்கள் சோர்ந்திருந்தன. எனது அறைக்குள், ஏனையோரே சாப்பாடுகளைக் கொண்டுவர வேண்டியிருந்ததது. எனது நான்கு வெற்றிகளில், இதுவே மிகவும் திருப்தி தருகின்ற ஒன்று ஆகும். இது அற்புதமானது" என்று அவர் தெரிவித்தார்.
23 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
48 minute ago