Shanmugan Murugavel / 2016 ஜூன் 06 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நொவக் ஜோக்கோவிச்சிடம் தோல்வியடைந்த பிரித்தானியாவின் அன்டி மரே, தனது தோல்வி குறித்து மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரை மோசமான முறையில் ஆரம்பித்த அன்டி மரே, முதலாவது சுற்றில், தரவரிசையில் உள்ளடக்கப்படாத செக் குடியரசைச் சேர்ந்த வீரரான றடெக் ஸ்டெபனெக்கை எதிர்கொண்டதோடு, முதலிரு செட்களையும் 3-6, 3-6 என்ற கணக்கில் இழந்து, தோல்வியை நோக்கிச் சென்றிருந்தார். பின்னர், அடுத்த இரண்டு செட்களையும் 6-0, 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய அவர், தீர்மானமிக்க மூன்றாவது செட்டை, 7-5 எனப் போராடியே வென்றிருந்தார். அதேபோலவே, இரண்டாவது செட்டிலும் மிகவும் போராடி, ஐந்தாவது செட்டில் வைத்தே வென்றிருந்தார்.
இந்நிலையில், தோல்வி குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜோக்கோவிச், 'நாம் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். 13 நாட்களுக்கு முன்னர் சில வேளைகளில், இந்த நிலைமையில் இருப்பதை நான் விரும்பியிருப்பேன். நான் தடுமாறிக் கொண்டிருந்தேன். முதலாவது சுற்றுடன் வெளியேறுவதற்கு, சில புள்ளிகள் வித்தியாசத்தில் இருந்தேன். ஆனால், இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற பின்னர், நீங்கள் வெற்றிபெறவே விரும்புவீர்கள்" என அவர் தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கப் பகிரங்க டென்னிஸ் தொடரிலும் 2013ஆம் ஆண்டில் விம்பிள்டன் தொடரிலும் சம்பியன் பட்டம் வென்ற அன்டி மரே, அவரோடு போட்டியிடும் தற்போதைய வீரர்களான ரொஜர் பெடரர், ரபேல் நடால், நொவக் ஜோக்கோவிச் ஆகியோரை விடப் பின்தங்கியுள்ளதை ஏற்றுக் கொண்ட போதிலும், எதிர்வரும் காலங்களில் வெல்ல முடியுமென நம்பிக்கை வெளியிட்டார்.
'கடந்த சில ஆண்டுகளாக நான் எதிர்கொண்ட வீரர்கள், எனது பயணத்தைக் கடினமாக்கியுள்ளார்கள். எல்லா சம்பியன்ஷிப் போட்டிகளையும் வெல்லும் வாய்ப்புக் காணப்பட்டது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஏனையோரே வென்றார்கள். ஆனால் அதைச் செய்வதற்கு, எனக்கும் இன்னும் சில ஆண்டுகள் இருக்கின்றன என நான் கருதுகிறேன். எனது விளையாட்டுக் காலத்தை முடிக்கும் போது, நான் எனது அடைவுகள் பற்றிப் பெருமையடைவேன் என நினைக்கிறேன்" என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .