2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

மோசமான ஆரம்பத்துக்கு மத்தியில் போல்ட்டுக்கு முதலிடம்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 12 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜமைக்காவின் உசைன் போல்ட், 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மோசமான ஆரம்பத்தைப் பெற்ற போதிலும், 9.88 செக்கன்களில் அத்தூரத்தை ஓடி முடித்து, றேசர்ஸ் கிரான்ட் பிறிக்ஸ் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதோடு, இவ்வாண்டின் இரண்டாவது அதிவேகமான ஓட்டத்தையும் பதிவுசெய்தார்.

ஆரம்பத்தில் மெதுவாக ஓடத் தொடங்கிய உசைன் போல்ட், 50 மீற்றர்கள் தூரமளவில் வைத்துத் தனது அதிவேகமான ஓட்டத்தை வெளிப்படுத்தி, இத்தூரத்தைப் பூரணப்படுத்தினார்.

உசைன் போல்ட் தவிர, சிறப்பான ஓட்டத்தை வெளிப்படுத்திய நிக்கெல் அஷ்மீடே, யொஹான் பிளேக் இருவரும் 9.94 செக்கன்களில் இத்தூரத்தைப் பூர்த்தி செய்தனர்.  அசாபா பவெல், 9.98 செக்கன்களில் இத்தூரத்தை நிறைவுசெய்தார்.

போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த போல்ட், 'இதுவொரு பூரணமான ஓட்டமன்று. ஆனால், நான் வென்றதோடு, காயமின்றி இவ்வோட்டத்தைப் பூர்த்திசெய்தமையென்பது சிறப்பான விடயம்" என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .