Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்ற நிலையில், கடந்த சனிக்கிழமை (06) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தொடரில், 2-0 என முன்னிலை பெற்றது.
இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்கள் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, அணித்தலைவர் ஏ.பி. டீ வில்லியர்ஸ் 73 ஓட்டங்களையும் ஜெ.பி.டுமினி 47 ஓட்டங்களையும் பப் டூ பிலிசிஸ் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில், இங்கிலாந்து அணி சார்பாக, ரீஸ் டொப்லி 4 விக்கெட்டுகளையும் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் அடில் ரஷீத் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 263 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி, 46.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, அலெக்ஸ் ஹேல்ஸ் 99 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணி சார்பாக, கைல் அபோட் 3 விக்கெட்டுகளையும் மோர்னே மோர்க்கல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக, இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவானார். இரண்டு அணிகளுக்கிடையிலான அடுத்த போட்டி, நாளை மறுதினம், இலங்கை நேரப்படி மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026