Shanmugan Murugavel / 2016 ஜனவரி 19 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் 5ஆம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், முதற்சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
சகநாட்டு வீரரான பெர்ணான்டோ வேர்டஸ்கோவை எதிர்கொண்ட அவர், முதலாவது செட்டை 6-7 என்ற கணக்கில் இழந்த போதிலும், அடுத்த இரண்டு செட்களை 6-4, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
ஆனாலும், அடுத்த செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றிய வேர்டஸ்கோ, தீர்க்கமான 5ஆவது செட்டில் 0-2 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்த போதிலும், தொடர்ந்து போராடி, 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றி, இப்போட்டியில் வெற்றிபெற்றார்.
இதேவேளை 2ஆம் நிலை வீராங்கனையான ரோமானியாவின் சிமோனா ஹலெப், 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 133ஆவது இடத்திலுள்ள சீனாவின் ஸங் ஷ்சுவாயையிடம் அதிர்ச்சி தோல்வியுற்றார்.
ஏற்கெனவே, பெண்கள் ஒற்றையர் பிரிவில் 10ஆம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், 4-6, 2-6 என்ற செட் கணக்கில், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஜொஹன்னா கொன்டாவிடம் தோல்வியடைந்த நிலையில், இரண்டாம் நாளில் பெறப்பட்ட மூன்றாவது அதிர்ச்சி முடிவாக இது அமைந்தது.
இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், 2ஆம் நிலை வீரர் அன்டி மரே, ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸ்வெரெவை 6-1, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். 3ஆம் நிலை வீராங்கனையான ஸ்பெய்னின் கார்பினே முகுருஸா, எஸ்தோனியாவின் அனெட் கொன்டவெய்ட்டை 6-0, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, பெற்றிபெற்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .