2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

முதல்நாள் முடிவில் இந்தியா 291/9

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரின் முதலாவது போட்டியின் முதல் நாள் முடிவில் இரு அணிகளுமே போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ள போதிலும், நியூசிலாந்து அணி சிறியளவிலான முன்னிலையைப் பெற்றுள்ளது.

கான்பூரில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.

இந்திய அணியில் இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா இருவரும் சுழற்பந்து வீச்சாளர்களாகவும் உமேஷ் யாதவ், மொஹமட் ஷமி இருவரும் வேகப்பந்து வீச்சாளர்களாகவும் களமிறங்கினர். மேலதிகப் பந்துவீச்சாளருக்குப் பதிலாக, 6ஆவது துடுப்பாட்ட வீரராக, றோகித் ஷர்மா சேர்க்கப்பட்டிருந்தார்.

நியூசிலாந்துக்காக நீல் வக்னர், ட்ரென்ட் போல்ட் இருவரும் வேகப்பந்து வீச்சாளர்களாகவும் மார்க் கிறெய்க், இஷ் சோதி, மிற்சல் சான்ட்னெர் மூவரும் சுழற்பந்து வீச்சாளர்களாகவும் களமிறங்கினர்.

இதன்படி அவ்வணி, முதலாவது விக்கெட்டுக்காக 42 ஓட்டங்களைப் பகிர்ந்தது. அதன் பின்னர் இணை சேர்ந்த முரளி விஜயும் செற்றேஸ்வர் புஜாராவும், 112 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால், அதன் பின்னர் அந்தச் சிறப்பான நிலையை, இந்திய அணி விட்டுக் கொடுத்து, 5 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களுடன் தடுமாறியது. இறுதி நேரத்தில் இரவிச்சந்திரன் அஷ்வின், ஓரளவு போராடியிருந்தார்.

துடுப்பாட்டத்தில் முரளி விஜய் 65 ஓட்டங்களையும் செற்றேஸ்வர் புஜாரா 62 ஓட்டங்களையும் இரவிச்சந்திரன் அஷ்வின் 40 ஓட்டங்களையும் றோகித் ஷர்மா 35 ஓட்டங்களையும் லோகேஷ் ராகுல் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சிறப்பாகப் பந்துவீசிய ட்ரென்ட் போல்ட்ற், மிற்சல் சான்ட்னெர் இருவரும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தவிர நீல் வக்னர், மார்க் கிறெய்க், இஷ் சோதி மூவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .