2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

முதலாம் நிலையிலிருந்து எட்டாமிடத்தில் இலங்கை

Shanmugan Murugavel   / 2016 மே 05 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில், உலக இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான தரப்படுத்தலில், இலங்கை அணி முதலிடத்தில் காணப்பட்டதோடு, உலக இருபதுக்கு-20 தொடரின் நடப்புச் சம்பியன்களாகவும் காணப்பட்டது.

மூன்றே மூன்று மாதங்களுக்குள், உலக இருபதுக்கு-20 தொடரில் குழு நிலையிலிருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை, தரப்படுத்தலில் 8ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் இடம்பெற்ற இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடர், பங்களாதேஷில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடர், இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடர் ஆகியவற்றில் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்தே, இலங்கை அணி இவ்வாறு மோசமான நிலையில் காணப்படுகிறது.

இருபதுக்கு-20 தரப்படுத்தலில் நியூசிலாந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தரப்படுத்தல்: 1. நியூசிலாந்து 2. இந்தியா 3. மேற்கிந்தியத் தீவுகள் 4. தென்னாபிரிக்கா 5. இங்கிலாந்து 6. அவுஸ்திரேலியா 7. பாகிஸ்தான் 8. இலங்கை 9. ஆப்கானிஸ்தான் 10. பங்களாதேஷ் 11. நெதர்லாந்து 12. சிம்பாப்வே 13. ஸ்கொட்லாந்து 14. ஐக்கிய அரபு இராச்சியம் 15. அயர்லாந்து 16. ஓமான் 17. ஹொங் கொங்

இதேவேளை, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் தரப்படுத்தலில் அவுஸ்திரேலிய அணி முதலிடத்தில் தொடர்ந்தும் காணப்படுவதோடு, இலங்கை அணி 5ஆவது இடத்தில் காணப்படுகிறது.

1. அவுஸ்திரேலியா 2. நியூசிலாந்து 3. தென்னாபிரிக்கா 4. இந்தியா 5. இலங்கை 6. இங்கிலாந்து 7. பங்களாதேஷ் 8. மேற்கிந்தியத் தீவுகள் 9. பாகிஸ்தான் 10. ஆப்கானிஸ்தான் 11. சிம்பாப்வே 12. அயர்லாந்து

சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட டெஸ்ட் தரப்படுத்தலில், அவுஸ்திரேலிய அணி முதலிடத்தில் காணப்பட்ட அதேவேளை, இலங்கை அணி 7ஆவது இடத்தில் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1. அவுஸ்திரேலியா 2. இந்தியா 3. பாகிஸ்தான் 4. இங்கிலாந்து 5. நியூசிலாந்து 6. தென்னாபிரிக்கா 7. இலங்கை 8. மேற்கிந்தியத் தீவுகள் 9. பங்களாதேஷ் 10. சிம்பாப்வே.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .