2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

மொரின்ஹோ மீது விசாரணை

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

போட்டியின் மத்தியஸ்தருடன் முரண்பாட்டின் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அரங்கை விட்டு வெளியேற்றப்பட்ட செல்சி அணியின் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோ, அது குறித்து கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் முறையான குற்றஞ்சாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வெஸ்ட் ஹாம் யுனைட்டட்டுக்கும் செல்சிக்குமிடையிலான போட்டியின் பாதி நேரத்தின் போது போட்டி மத்தியஸ்தரிடம் தர்க்கத்தில் ஈடுபட்டமைக்காகவும் போட்டி அதிகாரிகளின் அறையை விட்டு வெளியேறாமைக்காகவுமே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, ஒத்திவைக்கப்பட்ட ஒரு போட்டித்தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நடைபெறவுள்ள விசாரணையில், விதிகளை மீறியமை உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு ஒரு போட்டித்தடை விதிக்கப்படும்.

அவ்வாறு போட்டித்தடை விதிக்கப்பட்டால், சனிக்கிழமை இடம்பெறவுள்ள லிவர்பூல் அணிக்கெதிரான போட்டியில் அவர் பங்குபற்ற முடியாது போகும்.

இப்பருவகாலத்தில் தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து, 15ஆவது இடத்தில் செல்சி அணி காணப்படும் நிலையில், லிவர்பூல் அணிக்கெதிரான இப்போட்டி, மொரின்ஹோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் போட்டியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .