Shanmugan Murugavel / 2016 மே 02 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி சார்பாகத் தெரிவுசெய்யப்பட்ட மிற்சல் மார்ஷ், உபாதை காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து ஏற்கெனவே விலகியுள்ள நிலையில், கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி சார்பாகப் போட்டிகளில் பங்குபற்றிவந்த அவரது அண்ணனான ஷோன் மார்ஷூம், ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.முதுகு உபாதை காரணமாகவே அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
ஏப்ரல் 19ஆம் திகதி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் விளையாடும்போதே, ஷோன் மார்ஷூக்கு உபாதை ஏற்பட்டிருந்த நிலையில், அவர் அவ்வுபாதையுடன் நேற்று, குஜராத் லயன்ஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றியிருந்தார். எனினும், அவரது உபாதை குணமடையும் நிலை காணப்படாததால், தொடரிலிருந்து வெளியேறும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
7 போட்டிகளில் பங்குபற்றி 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ள கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி சார்பாக 6 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 31.80 என்ற சராசரியில் 118.65 என்ற அடித்தாடும் வீதத்தில் 159 ஓட்டங்களை, ஷோன் மார்ஷ் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .