Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான, மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசத் தொடரில், நேற்று வெள்ளிக்கிழமை, டுபாயில் இடம்பெற்ற முதலாவது போட்டியில், ஒன்பது விக்கெட்டுகளால், பாகிஸ்தான் அணி இலகுவாக வெற்றிபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட், தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார். அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
துடுப்பாட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக டுவைன் பிராவோ மாத்திரம் 55 (54) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், பாகிஸ்தான் அணி சார்பாக இமாட் வஸீம், நான்கு ஓவர்களில், 14 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளைப் கைப்பற்றினார்.
116 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 14.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அஸாம் 55(37) ஓட்டங்களைப் பெற்றார்.
போட்டியின் நாயகனாக இமாட் வஸீம் தெரிவானார்.
24 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
49 minute ago