2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

மக்கிறேகருடனான மோதல் சாத்தியம்: மேவெதர்

Shanmugan Murugavel   / 2016 மே 09 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீண்டும் குத்துச்சண்டைக்கு திரும்பப் போவதாக கருத்துக்களை ஏற்கெனவே வெளிப்படுத்தியிருந்த பிளயோட் மேவெதர், கலப்புத் தற்காப்புக் கலைகள் நட்சத்திரமான கோணர் மக்கிறேகருடன் மோதுவதற்காக ஓய்விலிருந்து மீள வருவது சாத்தியம் என தற்போது மேவெதர் கூறியுள்ளார்.

சாவுள் "கனேலோ" அல்வரேஸூக்கும் அமிர் கானுக்குமிடையிலான குத்துச்சண்டை போட்டியை காண கடந்த சனிக்கிழமை (07) வந்தபோதே மேற்படி கருத்துக்களை மேவெதர் வெளிப்படுத்தியுள்ளார்.

தன்னை நோக்கி எறியப்பட்ட பெயர் அதேவே என இணையத்தில் வெளியான காணொளி ஒன்றில் தெரிவித்த மேவெதர், நீங்கள் கேட்கும் வதந்திகள் அனைத்தும் தான் ஆரம்பித்தவை எனவும் இது வதந்தி இல்லாமல் இருக்கலாம் எனவும் தெரிவித்த அவர், ஆவலாய் இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

குத்துச்சண்டை வளையமொன்றில் இவ்வருடம் மோத மேவெதரும் அயர்லாந்தின் மக்கிறேகரும் ஒத்துக்கொள்ளும் இறுதி நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிப்பதோடு, இந்தப் போட்டிக்காக மேவெதருக்கு 144 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களும் மக்கிறேகறுக்கு 10 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

39 வயதான மேவெதர், தனது வாழ்நாள் காலத்தில் பங்குபற்றிய 49 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் குத்துச்சண்டையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .