2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

மட்ரிட் பகிரங்க டென்னிஸ்: சம்பியனானார் சிமோனா ஹலெப்

Shanmugan Murugavel   / 2016 மே 08 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் சம்பியனாக, உலகின் 7ஆம் நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப் தெரிவானார். ஸ்லோவாக்கியாவின் டொமினிகா சிபுல்கோவாவுக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்றே, அவர் சம்பியனாகத் தெரிவானார்.

ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய சிமோனா ஹலெப், 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் முதலாவது செட்டைக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில், முதலாவது செட்டை விட ஓரளவு போராட்டை மொமினிகா வழங்கிய போதிலும், அந்த செட்டை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய ஹலெப், சம்பியனாகத் தெரிவானார்.

ஹலெப் தனது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் சமந்தா சொற்சுரையும் டொமினிகா தனது அரைiயிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் லூசியா சிரிகோவையும் வெற்றிகொண்டு, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தனர்.

இதற்கு முன்னர், 2014ஆம் ஆண்டில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்த சிமோனா ஹலெப், அப்போட்டியில் மரியா ஷரபோவாவிடம் தோல்வியடைந்திருந்தார். முதலாவது செட்டை 6-1 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியிருந்த போதிலும், அடுத்த  செட்களையும் 2-6, 3-6 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்விகண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .