Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 செப்டெம்பர் 26 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
47வது தேசிய விளையாட்டு விழாவுக்கு இணைவாக நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில், சம்பியனாக மட்டக்களப்பு மாவட்டம் இம்முறை வெற்றிவாகை சூடிக்கொண்டது.
கிழக்கு மாகாண விளையாட்டு விழா நிகழ்வுகள், கடந்த 22,23ம் திகதிகளில் கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் நடைபெற்றன.
ஆரம்பநாள் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கலந்து சிறப்பித்து போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 200க்கு மேற்பட்ட வீர வீராங்கனைகள் இப்போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றியிருந்தனர். இவ்விழாவில், கிழக்கு மாகாணத்தினுடைய பல சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன.
அதன்படி சிறந்த சுவட்டு நிகழ்ச்சிக்கான வீராங்கனையாக அம்பாறை மாவட்டத்தினுடைய இ. ஜே. பி. ஏ. என். எதிரிவீர தெரிவுசெய்யப்பட்டார்.
அத்துடன் சிறந்த சுவட்டு நிகழ்ச்சிக்கான வீரராக திருகோணமலை மாவட்டத்தினுடைய ஏ. என். எம். நாசீக் தெரிவுசெய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago