2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

மட்ரிட்டுடனான வினிஷியஸின் ஒப்பந்தப் பேச்சுக்கள் முடக்கம்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் முன்களவீரரான வினிஷியஸ் ஜூனியரின் புதிய ஒப்பந்தமொன்று தொடர்பான பேச்சுக்கள் தடைப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மட்ரிட்டுடனான 25 வயதான வினிஷியஸின் ஒப்பந்தமானது 2027ஆம் ஆண்டு ஜூனுடன் முடிவடைகின்ற நிலையில், பருவகாலமொன்றுக்கு மேலதிக கொடுப்பனவுகள் உள்ளடங்கலாக 17 மில்லியன் யூரோக்களைப் பெறுகிறார்.

இந்நிலையில் வினிஷியஸின் ஊதியத்தை பருவகாலமொன்றுக்கு 20 மில்லியன் யூரோக்களாகவும், மேலதிக கொடுப்பனவுகளுடன் 30 மில்லியன் யூரோக்களாகமாறு அவரின் பிரதிநிதிகள் வேண்டுகின்றனர்.

ஆனால் மட்ரிட் மேலதிக 10 மில்லியன் யூரோ கொடுப்பனவுகள் இல்லாமல் 20 மில்லியன் யூரோக்களையே கழகம் வழங்க எதிர்பார்த்துள்ளது.

அந்தவகையில் 2030ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தத்தை நீடிப்பற்கு இது மிகச்சிறிய தொகையென நம்பும் வினிஷியஸின் பிரதிநிதிகள், எவ்வாறு இப்பருவகாலம் செல்லுகின்றதென்பதை நோக்கும் பொருட்டு காத்திருக்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .