2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

முதலாவது டெஸ்டில் 378 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், லாகூரில் ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பமான முதலாவது போட்டியின் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 378 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களைப் பெற்றுப் பலமான நிலையில் இருந்து பின்னர் குறுகிய இடைவெளியில் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தது.

பின்னர் 5 விக்கெட் இழப்புக்கு 362 ஓட்டங்களைப் பெற்றவாறு காணப்பட்ட பாகிஸ்தான் எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் 16 ஓட்டங்களுக்கு பறிகொடுத்திருந்தது. சல்மான் அக்ஹா 93, இமாம்-உல்-ஹக் 93, அணித்தலைவர் ஷண் மசூட் 76, மொஹமட் றிஸ்வான் 75 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் செனுரன் முத்துசாமி 6, பிரெனெலன் சுப்ராயன் 2, சைமன் ஹாமர் மற்றும் ககிஸோ றபாடா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X