2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மத்தியூஸ் சதம்; முன்னிலையில் இலங்கை

Shanmugan Murugavel   / 2022 மே 15 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சட்டோகிராமில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய முதல் நாள் முடிவில் இலங்கை முன்னிலையில் காணப்படுகிறது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆரம்பத்திலேயே கருணாரத்னவை நயீம் ஹஸனிடம் இழந்தது. பின்னர் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் ஒஷாத பெர்ணாண்டோவையும் 36 ஓட்டங்களுடன் நயீம் ஹஸனிடம் இலங்கை இழந்தது.

இதைத் தொடர்ந்து குசல் மென்டிஸூம், அஞ்சலோ மத்தியூஸும் இனிங்ஸைக் கட்டியெழுப்பிய நிலையில், 54 ஓட்டங்களுடன் தஜியுஸ் இஸ்லாமிடம் குசல் மென்டிஸ் வீழ்ந்ததுடன், சிறிது நேரத்தில் தனஞ்சய டி சில்வாவும் ஷகிப் அல் ஹஸனிடம் வீழ்ந்திருந்தார்.

இந்நிலையில், தினேஷ் சந்திமாலுடன் இணைந்து தனது சதத்தை மத்தியூஸ் பூர்த்தி செய்த நிலையில் இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தமது முதலாவது இனிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களை இலங்கை பெற்றுள்ளது. தற்போது களத்தில், மத்தியூஸ் 114 ஓட்டங்களுடனும், சந்திமால் 34 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X