Shanmugan Murugavel / 2016 ஜனவரி 18 , மு.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற போட்டிகளில் மன்செஸ்டர் யுனைட்டெட் வெற்றிபெற்றிருந்ததோடு ஆர்சனல், ஸ்டோக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
மன்செஸ்டர் யுனைட்டெட், 1-0 என்ற கோல்கணக்கில் லிவர்பூலைத் தோற்கடித்திருந்தது. இப்போட்டியில் பெறப்பட்ட கோலை 78ஆவது நிமிடத்தில், யுனைட்டெட்டின் நட்சத்திர வீரர் வெயின் ரூனி பெற்றிருந்தார். இப்போட்டியில், சிறப்பாக செயற்பட்டு ஐந்து கோல் பெறும் வாய்ப்புகளைத் தடுத்த டேவிட் டீ கியா, போட்டியின் நாயகனாக தெரிவானார்.
கடந்த 11 போட்டிகளில் இரண்டில் மாத்திரமே வெற்றி பெற்றிருந்த யுனைட்டெட், இப்போட்டியில் பெற்ற வெற்றி மூலம் பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறி, சம்பியன்ஸ் கிண்ணதுக்கு தகுதி பெறுவதற்கு இரண்டு புள்ளிகளையே பெறவேண்டியுள்ளது.
மறுபக்கம், ஆர்சனல், ஸ்டோக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தநிலையில், ஒரு புள்ளியைப் பெற்ற ஆர்சனல், கோல் எண்ணிக்கை காரணமாக பிறீமியர் லீக்கின் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .