2025 நவம்பர் 14, வெள்ளிக்கிழமை

மூன்றாமிடத்துக்கு முன்னேறிய டஃபி

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 12 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி முன்னேறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதல் மூன்று போட்டிகளிலும் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே ஒன்பதாமிடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.

இந்தியாவுக்கெதிரான நான்காவது போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் நாதன் எலிஸ், 11ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. வருண் சக்கரவர்த்தி, 2. ரஷீட் கான், 3. ஜேக்கப் டஃபி, 4. வனிது ஹசரங்க, 5. அடில் ரஷீட், 6. அகீல் ஹொஸைன், 7. நுவான் துஷார, 8. அப்ரார் அஹ்மட், 9. நாதன் எலிஸ், 10. அடம் ஸாம்பா.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. அபிஷேக் ஷர்மா, 2. பில் ஸோல்ட், 3. பதும் நிஸங்க, 4. ஜொஸ் பட்லர், 5. திலக் வர்மா, 6. ட்ரெவிஸ் ஹெட், 7. குசல் பெரேரா, 8. சூரியகுமார் யாதவ், 9. டிம் செய்ஃபேர்ட், 10. மிற்செல் மாஷ்

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. சைம் அயூப், 2. சிகண்டர் ராசா, 3. றொஸ்டன் சேஸ், 4. மொஹமட் நபி, 5. ஹர்திக் பாண்டியா

இதேவேளை பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 32 ஓட்டங்களைப் பெற்ற இலங்கையணித்தலைவர் சரித் அசலங்க, துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. றோஹித் ஷர்மா, 2. இப்ராஹிம் ஸட்ரான், 3. டரைல் மிற்செல், 4. ஷுப்மன் கில், 5. விராட் கோலி, 6. சரித் அசலங்க, 7. பாபர் அஸாம், 8. ஹரி டெக்டர், 9. ஷ்ரேயாஸ் ஐயர், 10. ஷாய் ஹோப்

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் வனிது ஹசரங்க, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 10ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ரஷீட் கான், 2. ஜொஃப்ரா ஆர்ச்சர், 3. கேஷவ் மஹராஜ், 4. மகேஷ் தீக்‌ஷன, 5. பெர்னார்ட் ஸ்கொல்ட்ஸ், 6. குல்தீப் யாதவ், 7. மிற்செல் சான்ட்னெர், 8. ஜொஷ் ஹேசில்வூட், 9. வனிது ஹசரங்க, 10. மற் ஹென்றி.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. அஸ்மதுல்லா ஓமர்ஸாய், 2. சிகண்டர் ராசா, 3. மொஹமட் நபி, 4. மெஹிடி ஹஸன் மிராஸ், 5. ரஷீட் கான்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X