Shanmugan Murugavel / 2024 நவம்பர் 01 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரில், தமது மைதானத்தில் வியாழக்கிழமை (31) நடைபெற்ற மன்செஸ்டர் சிற்றியுடனான இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்கு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தகுதி பெற்றுள்ளது.
டொட்டென்ஹாம் சார்பாக திமோ வேர்னர், பபே மடர் சார் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை மதெயுஸ் நுனெஸ் பெற்றிருந்தார்.
விலகல் முறையிலான இத்தொடரில் தமது மைதானத்தில் நடைபெற்ற லிஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் தகுதி பெற்றது. யுனைட்டெட் சார்பாக கஸேமீரோ, அணித்தலைவர் புரூனோ பெர்ணாண்டஸ் ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றதோடு அலெஜான்ட்ரோ கர்னாச்சோ ஒரு கோலைப் பெற்றார். லிஸ்டர் சார்பாக பிலால் எல் கனூஸ், கோனர் கோடி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது.
11 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
1 hours ago