2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மப்பேயின் பிரான்ஸை வீழ்த்தி சம்பியனானது மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனா

Shanmugan Murugavel   / 2022 டிசெம்பர் 18 , பி.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் நடைபெற்று வந்த கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில் ஆர்ஜென்டீனா சம்பியனானது. 

சற்று முன்னர் முடிவடைந்த இறுதிப் போட்டியில் பெனால்டியில் பிரான்ஸை வீழ்த்தியே ஆர்ஜென்டீனா சம்பியனானது. 

இப்போட்டியின் வழமையான நேரத்தில் போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததுடன், மேலதிக நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்று மீண்டும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. பிரான்ஸ் சார்பாகப் பெறப்பட்ட மூன்று கோல்களையும் கிலியான் மப்பே பெற்றதோடு, ஆர்ஜென்டீனா சார்பாக லியனல் மெஸ்ஸி இரண்டு கோல்களையும், ஏஞ்சல் டி மரியா ஒரு கோலையும் பெற்றனர். 

அந்தவகையில் பெனால்டியில் 4-2 என்ற ரீதியில் வென்றே ஆர்ஜென்டீனா மூன்றாவது முறையாக சம்பியனானது. இதில் ஆர்ஜென்டீன கோல் காப்பாளர் எமிலியானோ மார்டினெஸ் ஒரு உதையைத் தடுத்ததுடன், பிரான்ஸின் இன்னொரு உதையானது கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்தது. 

இத்தொடரின் நாயகனாக மெஸ்ஸியும், இளம் வீரராக என்ஸோ பெர்ணாண்டஸும், சிறந்த கோல் காப்பாளராக மார்டினெஸும் தெரிவாகினர். கடந்த 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திலும் தொடரின் சிறந்த வீரராகத் தெரிவாகியிருந்த மெஸ்ஸி, இவ்விருதை இரண்டாவது தடவை வென்ற முதலாமவராக தனது பெயரைப் பதிந்து கொண்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X