2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மரதனில் பாய்ந்த பெட்றோஸைத் தாண்டி வென்ற சிம்பு

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 15 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் டோக்கியோவில் இன்று அதிகாலை முடிவுக்கு வந்த உலகத் தடகள சம்பியன்ஷிப்பின் ஆண்களுக்கான மரதனில் தான்ஸானியாவின் அல்போன்ஸ் பீலிக்ஸ் சிம்பு, ஜேர்மனியின் மனல் பெட்றோஸைத் தாண்டி முதலிடம் பெற்றிருந்தார்.

போட்டி முடிவிடத்தில் பெற்றோஸ் பாய்ந்திருந்த நிலையில அவரைத் தாண்டி சிம்பு வென்றிருந்தார். இருவருக்குமிடையே 0.03 செக்கன்கள் வித்தியாசமே காணப்பட்டிருந்தது. சிம்பு போட்டித் தூரத்தை இரண்டு மணித்தியாலங்கள் 9 நிமிடங்கள் 48 செக்கன்களில் கடந்திருந்தார்.

2 மணித்தியாலங்கள் 9 நிமிடங்கள் 53 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த இத்தாலியின் இலியாஸ் அவானி மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X