2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

மழையால் தப்பித்த இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 16 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் உலகக் கிண்ணத் தொடரில் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் புதன்கிழமை (15) நடைபெற்ற பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் மழை காரணமாக முடிவேதும் பெறப்படவில்லை.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து, டியானா பைக், அணித்தலைவி பாத்திமா சனா (4), சாதியா இக்பால் (2), றமீன் ஷமிமிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து மழையால் 31 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இனிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களையே பெற்றது. சார்லி டீன் 33 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ன் முறைப்படி 31 ஓவர்களில் 113 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்ட நிலையில் போட்டியில் முடிவேதும் கிடைக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .