Editorial / 2018 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், பிரடியில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் ஆப்கானிஸ்தான் வென்றது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஹஸரத்துல்லா ஸஸாய் 82 (54), அஸ்கர் ஆப்கான் 37 (34), நஜிபுல்லா ஸட்ரான் ஆட்டமிழக்காமல் 20 (10), மொஹமட் நபி 12 (05) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பீற்றர் சேஸ் 3, பொய்ட் ராங்கின் 2, ஜோர்ஜ் டொக்ரல், சிமி சிங், ஜோஷுவா லிட்டில் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 161 ஓட்ட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 15 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 79 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 81 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், வில்லியம் போர்ட்பீல்ட் 33 (23), அணித்தலைவர் கரி வில்சன் 22 (28) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ரஷீட் கான் 4, முஜீப் உர் ரஹ்மான் 3, அப்தாப் அலாம், பரீட் அஹமட், மொஹமட் நபி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026