2025 மே 21, புதன்கிழமை

மீண்டும் சீரி ஏயில் டொன்னருமா?

Shanmugan Murugavel   / 2021 செப்டெம்பர் 29 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் கோல் காப்பாளரான ஜல்லூயிஜி டொன்னருமா, அக்கழகத்திலிருந்து வெளியேற எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 வயதான டொன்னருமா, நடப்புப் பருவகாலத்திலேயே இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனிலிருந்து பரிஸ் ஸா ஜெர்மைனில் இணைந்திருந்தார்.

இந்நிலையிலேயே, டொன்னருமாவை அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் இன்னொரு சீரி ஏ கழகமான ஜுவென்டஸுக்கு நகர்த்த அவரின் முகவரான மினோ றயோலா எதிர்பார்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

பரிஸ் ஸா ஜெர்மைனின் முதன்மை கோல் காப்பாளரான கெய்லர் நவாஸுடன் போட்டியிட வேண்டியுள்ளது தொடர்பில் டொன்னருமா கவலைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த கருத்துக்களை டொன்னருமா மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X