2025 மே 19, திங்கட்கிழமை

முடிவுக்கு வந்த பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாயப் போட்டிகள்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் கடந்த 28ஆம் திகதி ஆரம்பித்த 22ஆவது பொதுநலவாயப் போட்டிகள் நேற்று முடிவுக்கு வந்தன.

இப்போட்டிகளில் 67 தங்கப் பதக்கங்கள், 57 வெள்ளிப் பதக்கங்கள், 54 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 178 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் அவுஸ்திரேலியா முதலாமிடத்தைப் பெற்றிருந்தது.  

57 தங்கப் பதக்கங்கள், 66 வெள்ளிப் பதக்கங்கள், 53 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 176 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாமிடத்தைப் பெற்றது. 26 தங்கப் பதக்கங்கள், 32 வெள்ளிப் பதக்கங்கள், 34 வெண்கலப் பதக்கங்களென மொத்தமாக 92 பதக்கங்களுடன் மூன்றாமிடத்தை கனடா பெற்றது.

ஒரு வெள்ளிப் பதக்கம், மூன்று வெண்கலப் பதக்கங்களென மொத்தமாக நான்கு பதக்கங்களுடன் இலங்கை 31ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.

இந்நிலையில், அடுத்த 23ஆவது பொதுநலவாயப் போட்டிகளானவை அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ளன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X