2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முதலாமிடத்துக்கு முன்னேறினார் லபுஷைன்

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 26 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசைப் போட்டியில் முதலாமிடத்துக்கு மர்னுஸ் லபுஷைன் முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 154 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. மர்னுஸ் லபுஷைன், 2. ஜோ றூட், 3. ஸ்டீவ் ஸ்மித், 4. கேன் வில்லியம்ஸன், 5. றோஹித் ஷர்மா, 6. டேவிட் வோணர், 7. விராட் கோலி, 8. திமுத் கருணாரத்ன, 9. பாபர் அஸாம், 10. ட்ரெவிஸ் ஹெட்.

இதேவேளை, பந்துவீச்சாளர்களின் தரவரிசையில், குறித்த டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து 13ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பற் கமின்ஸ், 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. ஷகீன் ஷா அஃப்ரிடி, 4. டிம் செளதி, 5. ஜொஷ் ஹேசில்வூட், 6. ககிஸோ றபாடா, 7. நீல் வக்னர், 8. ஜேம்ஸ் அன்டர்சன், 9. மிற்செல் ஸ்டார்க், 10. கைல் ஜேமிஸன்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜேஸன் ஹோல்டர், 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. இரவீந்திர ஜடேஜா, 4. ஷகிப் அல் ஹஸன், 5. பென் ஸ்டோக்ஸ்.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் 79 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் பாபர் அஸாம், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் மூன்றாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி முதலாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பாபர் அஸாம், டேவிட் மலான், 3. மொஹமட் றிஸ்வான், 4. ஏய்டன் மார்க்ரம், 5. லோகேஷ் ராகுல், 6. ஆரோன் பின்ஞ், 7. டெவோன் கொன்வே, 8. ஜொஸ் பட்லர், 9. றஸி வான் டர் டுஸன், 10. மார்டின் கப்தில்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. வனிடு ஹஸரங்க, 2. தப்ரையாஸ் ஷம்சி, 3. அடம் ஸாம்பா, 4. அடில் ரஷீட், 5. ரஷீட் கான், 6. ஜொஷ் ஹேசில்வூட், 7. முஜீப் உர் ரஹ்மான், 8. ஷடாப் கான், 10. டிம் செளதி.

 

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

 

  1. மொஹமட் நபி, 2. ஷகிப் அல் ஹஸன், 3. லியாம் லிவிங்ஸ்டோன், 4. கிளென் மக்ஸ்வெல், 5. வனிடு ஹஸரங்க.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X