Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 04 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு சிம்பாப்வேயின் சிகண்டர் ராசா முன்னேறியுள்ளார்.
இலங்கைக்கெதிரான இரண்டு போட்டிகளிலும் 151 ஓட்டங்களைப் பெற்றதோடு, ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய நிலையிலேயே மூன்றாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி முதலாமிடத்தை ராசா அடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. சிகண்டர் ராசா, 2. அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய், 3. மொஹமட் நபி, 4. மெஹிடி ஹஸன் மிராஸ், 5. மிஷெல் பிறேஸ்வெல்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. கேஷவ் மஹராஜ், 2. மகேஷ் தீக்ஷன, 3. குல்தீப் யாதவ், 4. பெர்னார்ட் ஸ்கொல்ட்ஸ், 5. ரஷீட் கான், 6. மிற்செல் சான்ட்னெர், 7. மற் ஹென்றி, 8. இரவீந்திர ஜடேஜா, 9. வனிது ஹசரங்க, 10. குடகேஷ் மோட்டி.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. ஷுப்மன் கில், 2. றோஹித் ஷர்மா, 3. பாபர் அஸாம், 4. விராட் கோலி, 5. டரைல் மிற்செல், 6. சரித் அசலங்க, 7. ஹரி டெக்டர், 8. ஷ்ரேயாஸ் ஐயர், 9. ஷாய் ஹோப், 10. இப்ராஹிம் ஸட்ரான்.
இதேவேளை பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரின் தமது முதல் மூன்று போட்டிகளிலும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் மொஹமட் நபி, சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. ஹர்திக் பாண்டியா, 2. மொஹமட் நபி, 3. டிபேந்திர சிங்க் ஐரீ, 4. றொஸ்டன் சேஸ், லியம் லிவிங்ஸ்டன்
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. ஜேக்கப் டஃபி, 2. அடில் ரஷீட், 3. அகீல் ஹொஸைன், 4. வருண் சக்கரவர்த்தி, 5. அடம் ஸாம்பா, 6. வனிது ஹசரங்க, 7. ரவி பிஷ்னோய், 8. ரஷீட் கான், 9. நாதன் எலிஸ், 10. அர்ஷ்டீப் சிங்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. அபிஷேக் ஷர்மா, 2. திலக் வர்மா, 3. பில் ஸோல்ட், 4. ஜொஸ் பட்லர், 5. ட்ரெவிஸ் ஹெட், 6. சூரியகுமார் யாதவ், 7. பதும் நிஸங்க, 8. டிம் செய்ஃபேர்ட், 9. டிம் டேவிட், 10. யஷஸ்வி ஜைஸ்வால்.
5 minute ago
20 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
48 minute ago
1 hours ago