Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 18 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டின் முதலாம் நாளில் இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், காலியில் இன்று (18) ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, ஆரம்பத்திலேயே திமுத் கருணாரத்னவை வில்லியம் ஓ ருர்க்கிடம் இழந்தது. பின்னர் சிறிது நேரத்தில் பதும் நிஸங்கவையும் ஓ ருர்க்கிடம் 27 ஓட்டங்களுடன் பறிகொடுத்தது.
இதையடுத்து ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ் இனிங்ஸை நகர்த்திய நிலையில் 30 ஓட்டங்களுடன் நியூசிலாந்து அணித்தலைவர் டிம் செளதியிடம் வீழ்ந்தார்.
தொடர்ந்து ஒரு பக்கத்தில் கமிந்து மென்டிஸ் நிலைத்து நிற்க டி சில்வா கிளென் பிலிப்ஸிடம் வீழ்ந்ததோடு, 36 ஓட்டங்களுடன் ஓ ருர்க்கிடம் மத்தியூஸ் வீழ்ந்தார். பின்னர் குசல் மென்டிஸுடன் கமிந்து மென்டிஸ் இணைந்து இனிங்ஸைக் கட்டிழுப்பிய நிலையில் 50 ஓட்டங்களுடன் பிலிப்ஸிடம் குசல் வீழ்ந்தார்.
இறுதியில் 114 ஓட்டங்களுடன் அஜாஸ் பட்டேலிடம் கமிந்து வீழ்ந்த நிலையில் இன்றைய முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் இலங்கை பெற்றுள்ளது. ரமேஷ் மென்டிஸ் 14 ஓட்டங்களுடனும், பிரபாத் ஜெயசூரிய ஓட்டமெதுவும் பெறாமலும் களத்திலுள்ளனர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026