2025 ஜூலை 05, சனிக்கிழமை

முதலாவது அரையிறுதிப் போட்டி நாளை

Editorial   / 2019 ஜூலை 08 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதவுள்ளன.

மன்செஸ்டரில் இலங்கை நேரப்படி  நாளை பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவதற்கான வாய்ப்புகளை நியூசிலாந்தை விட இந்தியா அதிகமாகக் கொண்டிருக்கின்றது.

எவ்வாறெனினும், இந்திய அணியில் குறைகளில்லாமலில்லை. ஆக, அக்குறைகளை சரியாக நியூசிலாந்து இனங்கண்டு அதற்கேற்ற திட்டங்களுடன் களமிறங்கும்போது அவ்வணி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றால் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

இந்திய அணியைப் பொறுத்தவரையில், ரோஹித் ஷர்மா, அணித்தலைவர் விராத் கோலி, லோகேஷ் ராகுல் என முன்வரிசை வீரர்களே அவ்வணிக்கு பெரும்பான்மையான ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்கின்றனர். ஆக, இவர்கள் ஓட்டங்களைப் பெறத் தவறும் பட்சத்தில் ஓட்டங்களைப் பெற முடியாததாக மகேந்திர சிங் டோணி தலைமையிலான நிச்சயமற்ற மத்தியவரிசை காணப்படுகின்றது.

மறுபக்கமாக, இந்திய அணி இலக்கு வைக்கக்கூடிய நியூசிலாந்தின் பலவீனங்கள் முன்வரிசை, மத்தியவரிசை என இரண்டிலுமே காணப்படுகின்றன. ஏனெனில், நியூசிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாகக் களமிறங்கிய மார்டின் கப்தில், டொம் லேதம், ஹென்றி நிக்கொல்ஸ் ஆகியோர் சொல்லிக் கொள்ளும்படியாக ஓட்டங்களைப் பெறவில்லை.

இதுதவிர, வழமையாக ஓட்டக் குவிப்பு இயந்திரமாகக் காணப்படும் றொஸ் டெய்லர், டொம் லேதமும் குறிப்பிடத்தக்க ஓட்ட எண்ணிக்கைகளை பெறாத நிலையில், கேன் வில்லியம்சனை மாத்திரமே ஓட்டங்களுக்கு தனிமரமாக நம்பவேண்டியுள்ளது.

ஆக, இப்போட்டியைப் பொறுத்தவரையில் இப்போட்டியின் முடிவைத் தீர்மானிக்கக் கூடியவர்களாக நாணயச் சுழற்சி, ரோஹித் ஷர்மா, விராத் கோலி, ஜஸ்பிரிட் பும்ரா, கேன் வில்லியம்சன், ட்ரெண்ட் போல்ட், லொக்கி பெர்கியூசன் ஆகியோர் காணப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .