2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

முதலாவது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் 515/3

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 30 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான முதலாவது டெஸ்டின் நான்காம் நாள் முடிவில் தமது முதலாவது இனிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 515 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது.

இரண்டு போட்டிகளைக் கொண்ட இத்தொடரில், புலவாயோவில் வியாழக்கிழமை (26) ஆரம்பித்த இப்போட்டியின் நான்காம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 425 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் ஆரம்பத்திலேயே ரஹ்மத் ஷாவை 234 ஓட்டங்களுக்கு நியூமன் நையம்ஹுரியிடம் இழந்தது.

பின்னர் அணித்தலைவர் ஹஷ்மதுல்லாஹ் ஷகிடி, அஃப்ஸர் ஸஸாயின் இணைப்பில் ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் சேகரித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்ட நிலையில் நாள் முடிவுக்கு வரும்போது ஷகிடி ஆட்டமிழக்காமல் 179 ஓட்டங்களையும், ஸஸாய் 46 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X