2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

முதலாவது டெஸ்டில் போராடும் இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 04 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டின் நேற்றைய இரண்டாம் நாளில் இங்கிலாந்து போராடி வருகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியானது, லோர்ட்ஸில் நேற்று முன்தினம் ஆரம்பித்த நிலையில், நேற்றைய இரண்டாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றவாறு நியூசிலாந்து ஆரம்பித்தது.

இந்நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் 61 ஓட்டங்களுடன் மார்க் வூட்டிடம் ஹென்றி நிக்கொல்ஸ் வீழ்ந்ததோடு, அடுத்து வந்த வீரர்கள் வூட் (2), ஒலி றொபின்ஸன் (2), ஜேம்ஸ் அன்டர்சனிடம் (1) வீழ்ந்தபோதும், டெவோன் கொன்வே ஒரு பக்கத்தில் ஓட்டங்களைச் சேகரித்து 200 ஓட்டங்களுடன் இறுதி விக்கெட்டாக விழ, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 378 ஓட்டங்களை நியூசிலாந்து பெற்றது. நீல் வக்னர் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

அந்தவகையில், தமது முதலாவது இனிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து, ஆரம்பத்திலேயே டொம் சிப்லி, ஸக் க்றொலியை கைல் ஜேமிஸன், டிம் செளதியிடம் இழந்தது. எனினும், அடுத்து ஜோடி சேர்ந்த றோறி பேர்ண்ஸ், அணித்தலைவர் ஜோ றூட்டின் இணைப்பாட்டத்தில் நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களை இங்கிலாந்து பெற்றுள்ளது. களத்தில், பேர்ண்ஸ் 59, றூட் 42 ஓட்டங்களுடனுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .