2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முதலாவது டெஸ்டில் போராடும் இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 10 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டின் நேற்றைய முதல் நாள் முடிவில் இங்கிலாந்து போராடி வருகின்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், அன்டிகுவாவில் நேற்று முன்தினமிரவு ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜோ றூட், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

இங்கிலாந்து சார்பாக ஆரம்பத் துடுப்பாட்டவீரர் அலெக்ஸ் லீஸ் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஆரம்பத்திலேயே லீஸ், ஸக் குறொலி, றூட், டான் லோரன்ஸை கேமார் றோச், ஜேடன் சியல்ஸ், ஜேஸன் ஹோல்டரிடம் இழந்து தடுமாறியது.

பின்னர் பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், கிறிஸ் வோக்ஸுடனான ஜொனி பெயார்ஸ்டோவின் இணைப்பாட்டங்கள் காரணமாக முதல் நாள் முடிவில் தமது முதலாவது இனிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தற்போது களத்தில் பெயார்ஸ்டோ 109, வோக்ஸ் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர். முன்னதாக, ஃபோக்ஸ் 42, ஸ்டோக்ஸ் 36, லோரன்ஸ் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தனர். பந்துவீச்சில், ஹோல்டர், சியல்ஸ், றோச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .